அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

அலைகள் ஓய்கின்றன

மிகுந்த சந்தேகங்களுடன் இந்த வலைப்பதிவு தொடரை ஆரம்பித்தேன். என் மனைவியின் ஊக்கமே என்னைத் தொடர வைத்தது. கூடவே ஜோ, மஞ்சூர் ராசா, ரெஜினி ராம்கி போன்றோரின் வாழ்த்துக்கள், மற்றும் செயமோகன் அவர்களின் மின்னஞ்சல், தினமலர்வரை கொண்டுசென்றது. சில நேரங்களில் பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தபோதெல்லாம் யாராவது ஒருவர் ஒரு டானிக் பின்னூட்டம் போட்டுவிடுவார்.

மதி கந்தசாமியின் திறனாய்வு மறக்கமுடியாதது. அப்படிப்போடுவின் 'இவரை நட்சத்திரமாக்குங்கள்' எனும் கோஷம், வசந்தன், தாணு, ராகவன், கைப்புள்ள, பி.கே.எஸ், டி.பி.ஆர். ஜோசஃப், மாயவரத்தான், ஜான், கிறுக்கன், மணியன், சந்தோஷ், ராமச்சந்திரன் உஷா, காவியன், மகெஸ், தங்கமணீ, குமரன் ஆகியோரின் பின்னூட்டங்கள்... அல்ல சத்தூட்டங்கள், என்னை மேலும் எழுதத் தூண்டின. சீமாச்சு மீனே சாப்பிடாதவரானாலும் மீன் பற்றிய பதிவுக்கு பாராட்டளித்திருந்தார். எல்லோருக்கும் நன்றி.

வலைப்பதிவு எழுதுவது கடல் நடுவே தீவில் சிக்கித் தவிப்பது போன்றதொரு அனுபவம். யாராவது வந்து அங்கீகரிக்கும்வரை தனிமையும் வெறுமையும்தான். பின்னூட்டங்களின் மகிமை அதைப் பெறும்வரை புரிவதில்லை.

தமிழிலில் என் முதல் முயற்சி இது. ஆங்கிலத்தில் எழுதி பழக்கப்பட்டிருந்தேன். ஆங்கிலத்தில் எப்படி எழுதுவேனோ ஓரளவு அப்படியே தமிழிலும் எழுதினேன், இதுவே என் நடை நன்றாயிருக்கிரது என்கிற பாராட்டுக்களுக்கு காரணமாகலாம் என நினைக்கிறேன். திமிழிலக்கணம் படித்து வருடங்களாயிற்று, என் பதிவில் காணக்கிடைக்கும் இலக்கண, எழுத்துப்பிழைகளுக்காய் தமிழ்த்தாயிடமும், வாசகர்களிடமும், என் தமிழாசிரியர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

அலைகள் பாறைகள் மணல்மேடுகளை ஒரு நாவலாக எழுத ஆரம்பித்தேன். ஒரு அத்தியாத்திற்குப்பிறகு நாவல் எழுதுவது ஒரு மிகப்பெரும் முயற்சியாகப் பட்டது. மனதிலுள்ளது அந்த எழுதப்படாத நாவலின் கதை. இன்னும் சில தகவல்கள் சேகரித்து இந்தப்பதிவை ஒரு புத்தகமாகத் தொகுக்கலாம்... விரைவில் இதற்கான முயற்சி துவங்கும்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா பொகிறவர்கள் முட்டத்திற்கும் போகலாம். நாகர் கோவில் பேருந்து நிலையத்திலிருந்து (வடசேரி அல்ல), முட்டம் மற்றும் கடியபட்டினத்திற்கு பஸ்கள் உள்ளன. கடிய பட்டினம் செல்லும் எல்ல பஸ்களும் முட்டம் செல்வதில்லை. லைட் ஹவுஸ் வந்ததும் இறங்கினால் மேற்கில் அழகிய கடற்கரை காணலாம். கோவில் லைட் ஹவுசிலிருந்து கிழக்கில் தெரியும்.

முட்டம் மேடானதால் கடலை கிழ்நோக்கிப் பார்க்கும் அபூர்வக் காட்சி கிடைக்கிறது. லைட் ஹவுஸ் மேலே ஏற அனுமதி கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள். அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம்.

என் நினைவுப் பயணங்களில் என்னோடு பயணித்தமைக்கு நன்றி.

தொடர்ந்து தேனில் பதிக்கிறேன். பைபிள் கதைகள் தொடர் விரைவில் ஆரம்பம்.

Labels:

18 Comments:

At 1:09 PM, Blogger மகேஸ் said...

'அலைகள் பாறைகள் மணல்மேடுகள்' முடிந்து விட்டதா?. அல்லது தற்காலிக நிறுத்தமா? கடல் மேல் வாழ்க்கை பற்றி எழுதப்போவதாகக் கூறினீர்களே? ஆர்வத்துடன் உங்களின் பிற பதிவுகளையும் எதிர்பார்க்கிறோம்.

 
At 1:19 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்ன அதற்குள் முடித்துவிட்டீர்கள்?

காலையில் பல்தீட்டுகிறேனோ இல்லையோ உங்களின் இந்தப் பதிவில் புதிய இடுகைகள் வந்திருக்கின்றனவா என்று பார்ப்பது என் பழக்கம்.

இதுவரை, இங்கே எந்த இடுகையிலும் பின்னூட்டம் இட்டதில்லை. நீங்கள் எழுதியதில் பல விதயங்கள் புதிதாக இருந்தாலும் ஒரு தீவிலே பிறந்து கடலுக்கு அருகில் உள்ள நகரங்களில் வாழ்ந்து சில வருடங்கள் அமெரிக்கத் தீவொன்றில் வாழ்ந்து இப்போதும் கனேடித் தீவொன்றில் வாழ்பவள் ஆதலால் உங்களின் இடுகைகள் என்னில் ஏற்படுத்திய தாக்கங்கள் அனேகம். அந்த நேரத்து ஃபீலிங்க் பின்னூட்டம் இட அனுமதித்ததில்லை. சமீபத்தில் மிகவும் அனுபவித்துப் படித்த விதயம் உங்களின் இந்தத் தொடர். இந்தத் தொடரை எழுதியமைக்கு மிக்க நன்றி!

நிஜமாகவெ, வேற எழுத விதயமே இல்லையா?

நானெல்லாம் ஒரு இரண்டு வருஷம் தொடர்ந்து வாழ்ந்த என் கிராமத்தைப்பற்றி ஒரு இத்தானூண்டு விதயத்தைப் பெரிதாக்கியெல்லாம் எழுதி இருக்கிறேன்.

யோசிங்க. யோசிங்க. - அதைவிட, மனதில் அனுபவியுங்க. அனுபவியுங்க. அப்ப புது இடுகைக்கு விதயங்கள் தோன்றலாம்.

-மதி

பி.கு.: சில சோலிகளால் உங்களுக்கு உடனே தமிழ் மடல் இடமுடியவில்லை. இவ்வார இறுதிக்குள் எழுதுகிறேன். உங்களுக்கும் உங்கள் மனைவியாருக்கும்.

 
At 1:20 PM, Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

//அடுத்தமுறை இந்தியா வரும்போது ஒரு வலைப்பதிவர் கோட்டமொன்று முட்டத்தில் ஏற்பாடு செய்யலாம்.
//

your posts have actually inspired me. planning to go to your village when i go to india next time.

thanks for that.

-Mathy

 
At 1:21 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

மகேஸ்.. கொஞம் யேசித்தால் இன்னும் எழுதலாம். ஆனால் என்னுடைய ஏதோ வருந்தி எழுதுவதுபோல ஆகிவிடும். வெறும் நினைவுகளில் சஞ்சரித்ததுதான் இந்தத் தொடருக்கு அழகு சேர்த்தது.

கட்டாயத்தின்பேரில் எழுதும்போது செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்கிறது. அதை நான் செய்ய விரும்பவில்லை...

"ஐயையோ இத சொல்லியிருக்கலாமே" அப்படீன்னு ஏதாவது தொன்றினால் நிச்சயம் ஒனிரண்டு பதிவுகள் போடுவேன். அந்த வகையில் இது தற்காலிக நிறுத்தமே..

உங்கள் ஆதரவிற்கு நன்றி. எல்லா பதிவுகளையும் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

 
At 1:29 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

மதி.. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. நானும் இப்படி சின்ன விஷயங்களை பெரிதாக்கியிருக்கிறேன்...

வேலைப்பழு கொஞ்சம் அதிகமாகலாம் என்பதால் எழுதுவது குறைக்கவேண்டியுள்ளது.

முட்டம் போக முடிந்தால் போய்ப் பார்க்கவும்.

தொடர்ந்து இங்கு பதிக்க முயற்சி செய்கிறேன்.

I did not expect such readership for this series. I was not so prepared too.. let's see if I can continue to do this.

 
At 7:13 PM, Blogger ஜோ/Joe said...

சிறில்,
மதி சொன்னதைத் தான் திருப்பி சொல்ல நினைக்கிறேன்.
//planning to go to your village when i go to india next time.//
மதி,நம்ம வீடு அங்கிருந்து 10 கி.மீ தான்.அங்கேயும் வாங்க!

 
At 10:52 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

//பி.கு.: சில சோலிகளால் உங்களுக்கு உடனே தமிழ் மடல் இடமுடியவில்லை. இவ்வார இறுதிக்குள் எழுதுகிறேன். உங்களுக்கும் உங்கள் மனைவியாருக்கும்.//


Expecting your mail.

 
At 3:05 AM, Blogger தாணு said...

Cyril
தற்காலிகமாக உங்களின் இந்தத் தொடரை நிறுத்தியிருந்தாலும், மறுபடி ஆரம்பிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
எனது `கடற்கரைக் கவிதைகள்’ பதிவில் முட்டம் சேர்க்க முடியாமல் போனது வருத்தமே.
முட்டத்தில் பதிவர் கூட்டம் நடக்கும்போது நான் தான் முதல் வருகை.
எனக்குத் தெரிந்து `அலைகள் ஓய்வதில்லை'

 
At 2:00 PM, Blogger barathee|பாரதி said...

அலெக்ஸ்,
நான் வலைப்பதிவிற்குப் புதியவன். இன்றுதான் உங்கள் பதிவிற்கு வருகிறேன். ரொம்பவே எதார்த்தமா எழுதியிருக்கீங்க. பதிவில மட்டுமில்ல, பின்னூட்டங்களுக்கான பதிலில் கூட.
///
கட்டாயத்தின்பேரில் எழுதும்போது செயற்கைத்தனம் ஒட்டிக்கொள்கிறது. அதை நான் செய்ய விரும்பவில்லை...
////

 
At 2:12 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

பாரதி,
நன்றி. எனக்கு உண்மையிலேயே இன்னும் ஊரைப்பற்றி எழுத் ஆசைதான், உண்மையில் நான் சொன்ன காரணங்களுக்காக எழுதவில்லை.

பார்ப்போம் பின்னொரு காலம் இன்னொரு தளம் வரும்.

முழுவதும் படியுங்கள். பலருக்கும் பிடித்திருந்தது.
நீங்கள் இங்கு பின்னூட்டமிடுமுன்பே உங்கள் பதிவுகளைப் படித்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

 
At 8:35 AM, Blogger மணியன் said...

அடடா, என்ன சிறிலைக் காணோமே என்று தேடினால் இதுதான் விதயமா? உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. தொடருங்கள்.

 
At 9:53 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி மணியன்.

தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்கள் பாராட்டுக்கு நன்றி.

 
At 12:50 PM, Blogger நரியா said...

வணக்கம் Cyril அலெக்ஸ்
உங்கள் பதிவில் நான் தெரிந்துக் கொள்ள நிறைய விஷயம் இருக்கின்றது. "ஆறு" விளையாட்டிற்கு நண்பர்களைத் தேடிக் கொண்டிருந்தேன். நீங்க மாட்டுனீங்க :)).

உங்களை ஆறு விளையாட்டிற்கு அழைக்கிறேன். இதோ இந்த தளத்திற்கு சென்று 10 ஆவது பதிவின் கீழ் பாருங்கள்.
http://siriyapaarvai.blogspot.com/

உங்களின் விருப்பமான "ஆறு" களைப் பற்றி நாங்களும் தெரிந்துக் கொள்கிறோம்.

நன்றி!!
நரியா

 
At 9:22 AM, Blogger கதிர் said...

அலெக்ஸ்,

பாரதிராஜா படங்களில் கண்டிபாக இடம்பெறும் முட்டம் எனக்கு பிடித்தமான இடம். அதை பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது
தொடருங்களேன்

அன்புடன்
தம்பி

 
At 12:32 PM, Blogger மா.கலை அரசன் said...

ஓ...பக்கத்து ஊர் காரருங்களா. சில பதிவுகளைத்தான் படித்தேன், எதார்த்தமாக எழுதியிருக்கின்றீர்கள்.

 
At 2:31 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

தம்பி,
தொடர முடியாததன் காரணம் சொல்லியிருக்கிறேனே. நிஜமா இத திரும்ப தூசி தட்டணும்னு நினைப்பு வருவதுண்டு எப்போதும் கிடப்புல கிடக்குது.

கலை,
நன்றி. பக்கத்து ஊருன்னா? உங்க ஊர் என்னன்னு சொல்லலியே?

 
At 11:33 AM, Blogger G.Ragavan said...

தொடங்குதல் மிக எளிது
முடிப்பதுதான் பெரிய தொல்லை
என்று வைரமுத்து எழுதினார். அது காதலுக்கு மட்டுமல்ல எழுத்துக்குந்தான். சரியான பொழுதில் முடித்திருக்கிறீர்கள். ஏனென்றால் அடுத்த தொடருக்கு நேரம் ஆகிறதல்லவா! தொடரட்டும்.

 
At 6:21 PM, Blogger கோவை விஜய் said...

முட்டத்தின் அழகான கடற்கரை வெளியுலகுவந்தது பாரதிராராஜாவின்
கடலோரக் கவிதைகளுகு பிறகு.உங்கள் பதிவு மெலும் மெருகூட்டப் போகிறது

தி.விஜய்
pugaippezhai.blogspot.com
வாங்கோணா வாங்கோ கோவையின் ரேஸ் திருவிழாவை பார்க்க வாங்கோணா..! 20 மறுமொழிகள் | விஜய்

 

Post a Comment

<< Home